இடுகைகள்

ஏப்ரல், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
படம்
பட்டா பெயர் மாற்றம் செய்வதில் ஏன் தாமதங்கள்? தெரிந்து கொள்ள வேண்டிய 15 காரணங்கள்…. ஒருவர் ஒரு இடத்தை கிரயம் பெற்று, அக்கிரைய பத்திரத்தை வைத்து தன் பெயருக்கு வருவாய் துறை ஆவணங்களில் மாற்றுவதே பட்டா பெயர் மாற்றம் ஆகும். கூட்டுப் பட்டாவில் பெயர் சேர்த்தல், உட்பிரிவு இல்லாத வகை ( Full Field ) பெயர் மாற்றம், உட்பிரிவு செய்ய வேண்டியவை என மூன்று வகையான பட்டா பெயர் மாற்றம் இருக்கிறது. கூட்டுப் பட்டா கூடுதல் எளிமையானதாகவும், உட்பிரிவு இல்லாத ( Full Field ) பெயர் மாற்றம் சற்றே எளிமையாகவும் உட்பிரிவுடன் கூடிய பெயர் மாற்றம் கொஞ்சம் வேலை கூடியதாகவும் இருக்கும். 1. கிரயம் வாங்கி இருக்கும் கிரைய பத்திரத்தில் புதிய, மற்றும் பழைய சர்வே எண் விபரங்கள், பட்டா எண், அளவுகள் போன்றவை பிழையாக இருந்தால். 2. முன் பட்டாவில், பெயர், தந்தை பெயர், சர்வே எண், அளவுகளில் பிழைகள் இருந்தால், 3.பட்டா மற்றும் நில வருவாய் ஆவணங்களில் இருக்கும் பெயருக்கும் தங்களுக்கு கிரயம் எழுதி கொடுத்து இருக்கும் நபரின் பெயருக்கு இடையில் இருக்க வேண்டிய லிங்க் ( இணைப்பு ஆவணங்கள் ) டாகுமெண்ட்கள் இல்லை என்றாலும், 4 சர்...
படம்
தமிழகம் முழுவதும் புதிதாக நிலவரி திட்ட சர்வே செய்யப்பட வேண்டும். ஏன் செய்யப்பட வேண்டும்? வருவாய் துறை நில ஆவணங்களில் உள்ள பல்வேறு குளறுபடிகளால் பொதுமக்கள் பெருமளவில் அவதிபட்டு கொண்டு இருக்கின்றனர். 1985 களில் நடந்த நிலவரிதிட்ட சர்வேயின் போது பூர்வீக சொத்துக்களில் சில பங்காளிகள் பெயர் மட்டும் கணக்கில் ஏறி இருக்கும் மீதி பங்காளிகள் பெயர் ஏறி இருக்காது. பட்டா தன் பெயருக்கு வந்த பங்காளி , பட்டா கணக்கில பெயர் ஏறாத பங்காளிக்கு இடத்தை பிரித்து ஒப்படைக்காமல் வேறு நபருக்கு கிரயம் கொடுக்கும் பொழுது பல சண்டை, சச்சரவுகள், பெரியமனுசன்கள், நீதிமன்றம், காவல் நிலையை பஞ்சாயத்துக்களில் காலத்தையும், பணத்தையும் உறவுகளையும் இழந்து கொண்டு இருக்கின்றனர். நிலவரிதிட்ட சர்வே செய்யப்பட்ட கணக்கில் தனியார் ஒருவர் கிரயம் வாங்கி கிரைய பத்திரம் (பழையசர்வே எண் இருக்கிற)வைத்து இருக்கிறஅச்சொத்து புறம்போக்கு என தவறுதலாக வகைப்படுத்தப்பட்டால், பாதிக்கபட்டமக்கள், மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் ஆய்வாளர், கோட்டாட்சியர், தாசில்தார் நடையாய் நடக்கின்றனர். புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்டது செல்லாது என வருவாய்துறையி...
படம்
யூடிஆர் / கிராமநத்தம் / புலபடங்களில் தவறு இருந்தால் அதனை திருத்தங்கள் செய்ய என்னென்ன செய்ய வேண்டும்? – UDR பட்டாவில் தவறான நபர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. – பிற பங்காளிகள் பெயர் கூட்டுபட்டாவில் இல்லை! – பட்டாதாரர் & தந்தை பெயர் பிழையாக இருக்கிறது, எழுத்து & பெயர் பிழையாக இருக்கிறது ? – UDR க்கு முன்பே எங்களிடம் பட்டா இருக்கிறது ஆனால் எங்கள் பெயர் ஏறவில்லை ! – இடத்தின் பரப்பளவு கூடுதலாக / குறைவாக UDR ல் உள்ளது.? – சர்வே எண்கள் / உட்பிரிவுகள் தவறுதலாக உள்ளது. – கௌநிலத்தின் வகை புஞ்சையிலிருந்து நஞ்சை ஆகிவிட்டது, புன்செய் கிராம நத்தம் ஆகிவிட்டது, அதே போல் நன்செய் – புன்செய் ஆகிவிட்டது. நத்தம் புன்செய் ஆகிவிட்டது போன்ற தவறுகள். – கிராம நத்த சர்வேயின் போது எங்கள் இடத்தை அனாதீனம் ஆக்கி விட்டனர் , புறம்போக்கு என்று வகைபடுத்திவிட்டனர். – கிராம நத்த ஆவணங்களில் நாங்கள் அனுபவிக்கும் வீட்டை பக்கத்து வீட்டுகாரர் பெயரில் ஏற்றிவிட்டனர். – கிராம நத்த நிலத்தில் பத்திரத்தில் 10சென்ட் இருக்கிறது, ஆனால் தோரயபட்டா 5 சென்ட் தான் கொடுத்து இருகிறார்கள். – கிராம நத்த ஆவணங்களில...